சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தருமன் சண்முகரத்னத்திற்கு பிரதர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா – சிங்கப்பூர் இருதரப்பு உறவில் இணக்கமான சூழலை ஏற்படுத்த தருமன் சண்முகத்தோடு இணைகிறேன் என கூறியுள்ளார்.
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தருமன் சண்முகரத்னத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தருமன் சண்முகரத்னத்திற்கு எனது வாழ்த்துக்கள்.
தருமனின் ஈர்க்கக்கூடிய தகுதிகள், தமிழ் பாரம்பரியம் எங்களை பெருமைப்படுத்துகிறது. சிங்கப்பூர் அதிபராக தருமன் சண்முகரத்னம் தேர்வானது அம்மக்களின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது,”எனத் தெரிவித்துள்ளார்.