ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நேரத்தையும்,
பெரும் செலவையும் மிச்சப்படுத்தும் என மத்திய அரசு சொல்லி இருக்குது.

அது தான் உள் குத்து?

ஒவ்வொரு மாநிலத்திலும் சில கட்சிகள் ஆட்சி செய்து வருகிறது. தற்போது அக்கட்சிகள் இந்தியா கூட்டணியில் ஐக்கியம் ஆனது. இதில் ஆளும் கட்சி இல்லாத கட்சிகளும் ஐக்கியம் ஆகி இருப்பதால் மத்தியில் ஆளும் பா.ஜ.க.,வுக்கு சற்று கிலி ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பா.ஜ.க.,வின் மீது மக்கள் அதிருப்தியில் இருந்தாலும் காவிக்கு மயங்கி இருப்பதும் உண்மை.

இதை சமாளிப்பது எப்படி என்பது தான் புதிய அவதாரமாக கொண்டு வந்துள்ளது ஒரே நாடு, ஒரே தேர்தல்.

ஒரே தேர்தல் வந்தால் மாநிலத்தின் ஆட்சி கலைக்கப்பட்டு காபந்து அரசாக மாறி விடும். மேலும் கவர்னர் பார்வையில் அரசு செயல்படும்.

நாடாளுமன்ற தேர்தல் போது ஆளும் மாநில கட்சிக்கு ஆதரவாக காவல் துறை செயல்படாமல் நடுநிலையோடு செயல்படும். மொத்த கன்ட்ரோல் தேர்தல் ஆணையத்தின் கீழ் இயங்கும். இது ஆளும் கட்சிக்கு கடிவாளமாக அமையும்.

இதன் மூலம் மீண்டும் ஒரு ரவண்ட் வரலாம் என பா.ஜ.க.,வின் கணக்காகும்.

யார் எந்த வியூகம் வகுத்தாலும் தேர்தல் நெருங்கும் போது ஒரு கணிப்பு ஊர்ரஜிகம் செய்தாலும் ஓட்டு பதிவின் போது தான் எந்த கட்சி ஆட்சி அமையும் என்பதை அடித்து சொல்லலாம்.

ஆளும் மாநில கட்சிகளுக்கு கடிவாளம் போடவே ஒரே நாடு, ஒரே தேர்தல் ஆகும்.

இது சாத்தியமா? அல்லது இல்லையா? என புரிந்துக் கொள்ள முடியாமல் இருந்தாலும் பிரதமர் மோடி நினைத்து விட்டார் என்றால் அது சாத்தியம் என்பதே உறுதி. ஒரே நாடு ஒரே தேர்தல் வாய்ப்பு பிரகாசமாக கண்ணுக்கு தெரிகிறது என்பது எனது பார்வை.