சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை இல்லாத வகையில் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 85.89 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், வெளி ஊரில் இருந்து வரும் பயணிகளுக்கும் நம்பகத்தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது.
அந்தவகையில் 2023 ஜூலை மாதத்தைவிட ஆகஸ்ட் மாதத்தில் 3,36,215 பயணிகள் கூடுதலாக பயணித்துள்ளனர்.