திருப்பூர் மாவட்டம், அவிநாசி சேர்ந்த மணிவண்ணன் இவரது மகள் சத்யஸ்ரீ இவர் திருப்பூர் 60 அடி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரிசப்ஷினிஸ்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு வந்த சத்திய ஸ்ரீ பணியில் இருந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த நரேந்திரன் என்ற வாலிபர் அந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது திடீரென இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நரேந்திரன் தன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சத்திய ஸ்ரீவின் கழுத்தில் அறுத்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சத்திய ஸ்ரீ சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விழுந்தார். அருகில் இருந்தவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். நரேந்திரனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அழைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.