தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 29ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தாம்பரம் சண்முகம் சாலையில் 500 க்கும் மேற்பட்டவர்களு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொது செயலாளர், தாம்பரம் மாநகராட்சி 50வது வார்டு மாமன்ற உறுப்பினருமான எம்.யாகூப் கலந்துக்கொண்டார் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னே கழகம் சமுதாய வேறுபாடுகள் இல்லாமல் தொண்டாற்றி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் அவசர ஊர்திகள், பெருமழை வெள்ளம், புயல் பேரிடர் காலத்தில் கலத்தின் சேவையும் கொரோனாகாலத்தில் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கியும், இறந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அவர்கள் மத அடிப்படையில் இறுதி சடங்குகளுடன் அடக்கம் செய்து மக்கள் சேவையில் முதல் இயக்கமாக திகழ்கிறது என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில்
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.ஜாகிர் உசேன், மமக (பொறுப்பு )மாவட்ட செயலாளர் எம்.அப்துல் ரஹீம்,மாவட்ட பொருளாளர் எம்.சபியுல்லா, மாநில இளைஞர் அணி செயலாளர் S.தமிம்அன்சாரி, மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் எம்.முஜிபுர் ரஹ்மான், MTSமாநில பொருளாளர் A.ஆசிக் ஹமீது, மாவட்ட துணைச் செயலாளர் OKN. அப்துல் காதர், B.சாகுல் ஹமீது, தாம்பரம் மத்திய பகுதி தலைவர் M. ஜலாலுதீன்,பகுதி செயலாளர் அப்துல் சமது, M.K.அப்துல் ரஜாக், பகுதி பொருளாளர் A.ஹசிபுல் அரபி மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் பகுதி, வார்டு நிர்வாகிகள் பெருந்திரலாக கலந்து கொண்டார்கள்.