தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சென்ற ஆகஸ்ட் 8 அன்று வெளியிட்டது.
விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி வரும் ஆகஸ்ட் 18 தொடங்கி தற்போது நடந்து வருகிறது.
சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 17, 2023.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், இந்தத் தேர்வுக்கு http://www.tnusrb.tn.gov.in இணையத்தளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) அறிவித்திருக்கிறது.
கல்வித் தகுதி, குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் பயின்று இருந்தால் அவர்களுக்கு 20% முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பைப் பொறுத்தவரைக் குறைந்தபட்சம் 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி,
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர் BC(M) / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் (MBC / DNC) – 28 வயது,
ஆதிதிராவிடர் (SC) / ஆதிதிராவிடர் (அருந்ததியர் SC(A) ) / பழங்குடியினர் (ST) – 31 வயது
மூன்றாம் பாலினத்தவர் – 31 வயது,
ஆதரவற்ற விதவைகள் – 37 வயது,
முன்னாள் இராணுவத்தினர் மற்றும் முன்னாள் மத்திய ஆயுத காவல்படையினர் – 47 வயது.
இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை மொத்த காலிப்பணியிடங்களிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு 10 சதவிகிதமும், சார்ந்துள்ள வாரிகதாரர்களுக்கு 10%. முன்னாள் இராணுவத்தினருக்கு 5% மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 3% ஒதுக்கப்படும். தற்போதுள்ள அரசு விதிகளின் படி வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்திருக்கிறது.
கூடுதல் தகவல்களுக்கு: http://www.tnusrb.tn.gov.in