அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி எதிரொலியால் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கே பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தது.

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது தரப்பை கருத்தையும் கேட்காமல் எவ்வித உத்தரவை பிறப்பிக்க கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

2022 ஜூலை 1ல் நடத்தப்பட்ட அதிமுக பொது குழு நிறைவேற்றப்பட்ட நீக்க தீர்மானங்களை எதிர்த்த ஓபிஎஸ், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மனுக்கள் அளித்திருந்தனர்.