சேலையூரில் போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் தொடர்பு இருப்பதாக சினிமா பைனான்சியர் பிடிபட்டார். இது தொடர்பாக நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியிடம் விசாரணை நடந்துள்ளது.
கேரளாவில் சில மாதங்களுக்கு முன்பு இலங்கை படகில் கள்ள துப்பாக்கிகளும் போதை பொருளும் கைப்பற்றப்பட்டன.
இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் இந்த வழக்கில் 13வது நபராக ஆதி லிங்கம் என்பவர் என். ஐ ஏ.வால் சேலையூரில் கைது செய்யப்பட்டார். இவர் சினிமா பைனான்சியர் ஆவார்.
மேலும் ஒரு கட்சியையும் நடத்தி வருகிறார். இவர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமியிடம் உதவியாளராக செயல்பட்டுள்ளார். எனவே இது தொடர்பாக வரலட்சுமிக்கு என்.ஐ.ஏ சம்மன் அனுப்பி இருப்பதாக செய்தி வெளியானது. இதனை மறுத்த வரலட்சுமி இந்த சம்பவம் தொடர்பாக தனது தாயாரிடம் போலீசார் விசாரணை நடத்தியதாக கூறினார். மேலும் இந்த வழக்கில் போலீசுக்கு முழு ஒத்துழைப்பு தர இருப்பதாகவும் ஆதி லிங்கம் ஃப்ரீ லான்ஸ் முறையில் தங்களிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உதவியாளராக இருந்தார் என்றும் தற்போது அவரிடம் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.