தாம்பரம் காவல் ஆணைய சரக்கத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகள் அருகில் குட்கா பான் மசாலா போன்ற போதை புகையிலை பொருட்கள் விற்கப்படுவதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் போதை புகையிலை பொருட்களுக்கு அடிமை ஆவதை தடுக்கும் விதமாக தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் பவன்குமார் ரெட்டியின் மேற்பார்வையில் உதவி ஆணையாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் காவல் துறையினர் குரோம்பேட்டை ஆண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா போதைப்பொருட்கள் கைப்பற்றி கடையின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இது போன்ற தொடர் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை தரப்பிலிருந்து கூறப்பட்டது.