பழம்பெரும் நடிகர் பாலையா பேரன் பாலாஜி தங்கவேல் வீட்டின் நீச்சல் குளத்தில் இருந்த முதலை குட்டி மற்றும் ஆமையை வனத்துறையினரிடம் ஒப்படைப்பு.
சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் வசித்து வருபவர் மறைந்த பழம்பெரும் நடிகரான பாலைய்யாவின் பேரன் பாலாஜி தங்கவேல் இவர் இன்று காலை அவரது வீட்டின் நீச்சல் குளத்தை பராமரிப்பதற்காக குளத்தை சுத்தபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒன்றரை அடி நீளத்தில் ஏதோ தண்ணீரில் நீந்துவதை கண்ட அவர், நீச்சல் குளத்தில் இருந்த நீரினை முழுவதும் இறைத்து பார்த்த போது அதில் இருந்தது முதலை என தெரிந்துக்கொண்ட அவர் அதனை லாவகமாக பிடித்து பாதுகாப்பாக வைத்தார்.
வனத்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் உடனடியாக வனத்துறையினர் வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் மூலம் அந்த முதலைகுட்டியினை உயிரியல் பூங்காவிற்கு பத்திரமாக கொண்டு சென்றனர்.
இதனுடன் ஒரு ஆமைகுட்டியும் பிடிபட்டது அதனையும் எடுத்து சென்றனர்.
நெடுங்குன்றம் பகுதியில் முதலைகள் அவ்வப்போது பிடிபடுவது வாடிக்கையாகி வருவதால் வனத்துறையினர் நீர் நிலைகளில் இருக்கும் முதலைகளை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.