தாம்பரத்தில் பள்ளத்தில் விழுந்த மாட்டை தீயணைப்பு படையினர் மீட்டனர்
தாம்பரம் மாநகராட்சி 50-வது வார்டு காதர்பாய் தெருவில் ஒரு மாடு குழியில் விழுந்து விட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு படைக்கு தகவல் தரப்பட்டது.
அவர்கள் வந்ததும் மாமன்ற உறுப்பினர் எம் யாகூப் மற்றும் த.மு.மு.க கட்சி தொண்டர்கள் இணைந்து மாட்டை குழியில் இருந்து மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர்..