மு.க.ஸ்டாலின் (28.08.2023) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் சென்னை, போரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உலகளவில் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட சரக்கு போக்குவரத்து மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மையில் உலகளவில் முன்னணியில் உள்ள நிறுவனம், இந்தியாவில் முதலாவதாக, சென்னை போரூரில் 400-&-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைத்துள்ள தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே.விஷ்ணு நிறுவனத்தின் உலகளாவிய தலைமை டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப அலுவலர் பாலசுப்ரமணியன், தலைமை மனித வள அலுவலர் டேரல் ஃபோர்டு, இந்தியாவிற்கான துணைத் தலைவர் சுப்ரமணி ராமகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.