மதுரை சுற்றுலா ரயில் தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து விட்டது. இறந்தவர்கள் அனைவரும் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர்கள். அங்கிருந்து 60 பேர் ஆன்மிகப் பயணமாக வந்தனர். இவர்கள் திருவனந்த புரத்தில் சாமி கும்பிட்டு விட்டு அங்கிருந்து நேற்று அதிகாலையில் மதுரை வந்து சேர்ந்தனர். மதுரையில் அவர்கள் வந்த பெட்டி தனியாக கழற்றி விடப்பட்டது. அந்த பெட்டியில் உள்ளே பூட்டிக்கொண்டு சமைத்த போது தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது.எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரயில்வே இலாகா தலா ரூ10 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது.