எஸ்ஆர்எம் கல்வி குழுமங்களின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் எம்.பியின் பிறந்த நாள் விழா சேவை திருநாள் முப்பெரும் விழாவாக நடத்தப்பட்டது. விழாவில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பங்கேற்று விழா மலரினை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். விழாவை யொட்டி சிறப்பு பட்டிமன்றம், கவியரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவில் நல்லி குப்புசாமி செட்டியார், விஜிபி நிறுவன தலைவர் வி.ஜி.சந்தோசம், முன்னாள் மாநில தகவல் ஆணையர் பேராசிரியை சாரதா நம்பி ஆருரன், பட்டிமன்ற நடுவர், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், பெப்சி அமைப்பின் தலைவர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆர்.கே. செல்வமணி, பாடலாசிரியர் அறிவுமதி, எஸ்ஆர்எம் தமிழத்துறை தலைவர் பா. ஜெயகனேஷ், வணிகவியல் துறை தலைவர் கு.செல்வசுந்தரம், பல் மருத்துவ கல்லூரி மருத்துவர் அ.சிவச்சந்திரன், கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணைமுதல்வர் பேராசிரியர் கா.மதியழகன், வள்ளியம்மை பொறியியல் கல்லூரி துணைபேராசிரியர் க.சண்முகம் ஆகியோர் டாக்டர் பாரிவேந்தரின் கல்வி, சமூக, மருத்துவ சேவைகளை பாராட்டி வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியை எஸ்ஆர்எம் தமிழ்த்துறை தலைவர் பா.ஜெய்கணேஷ் தொகுத்து வழங்கினார். முடிவில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பதிவாளர் சு.பொன்னுசாமி நன்றி கூறினார்.