சந்திராயன்-&-3 விண்கலம் நிலவில் இறங்கியதை தொடர்ந்து குரோம்பேட்டை சமூக சேவகர் போலீஸ் கிருஷ்ணமூர்த்தி பல்லாவரம் ரேடியல் ரோட்டில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினார். மேலும் குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களுடன் திரண்டு சென்று அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சமூக சேவகர் வி.சந்தானம், ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.