விலையை கட்டுப்படுத்த தான் ஆட்கள் இல்லை என பொதுமக்கள் புலம்பல்!
நாளை மறுநாள் ஓணம் பண்டிகை கொண்டாடப் படுவதையொட்டி குமரி மாவட்டம் தோவாளையில் இரண்டு நாட்கள் சிறப்பு மலர் சந்தை நடக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 700 டன் பூக்கள் இந்த சந்தைக்கு வந்துள்ளது.
ஓணத்தின் சிறப்பு அம்சமான அத்தப்பூ கோலங்களுக்கு தேவையான வாடாமல்லி, கேந்தி,சம்பங்கி, ரோஜா, தாமரை,மரிக்கொழுந்து, செவ்வந்தி என அனைத்து பூக்களின் விலையும் பல மடங்கு உயார்வு.
கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பூ வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தோவாளை மலர் சந்தையில் குவிந்துள்ளார்கள்.
கிலோ ஒன்றிக்கு 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட வாடாமல்லி 200 ரூபாய்க்கும், வெள்ளை செவ்வந்தி பூ 250 ரூபாயில் இருந்து 400 ரூபாய்க்கும், மரிக்கொழுந்து 100 ரூபாயில் இருந்து 150 ரூபாய்க்கும், ரோஜா வகைகள் 100 ரூபாயில் இருந்து 300 ரூபாய்க்கும், பிச்சி மற்றும் மல்லிகை பூக்கள் 650 ரூபாயில் இருந்து 1000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
தாமரை பூக்கள் 100 எண்ணம் 200 ரூபாயில் இருந்து 1200 ரூபாய் என உயர்ந்துள்ளது.
பூக்களை பன்மடங்கு உயர்ந்து இருப்பது வேதனையாக உள்ளது என்றும் விலையை கட்டுப்பத்த யாரும் இல்லை என பொதுமக்களின் புலம்பல் கேட்க முடிந்ததாம்!