ஆப்பிள், திராட்சையை விட இலந்தைப்பழம் அதிக சத்துக்கள் உள்ளன. இந்த பழம் குறைந்த விலையில் இருப்பதால் ஏழைகளின் பழம் என்றும் அழைக்கப்படுகிறது.
நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊற வைக்கும் இனிப்பும் புளிப்புச் சுவையும் கொண்டது. இதன் காய்கள் பச்சை நிறத்திலும், பழம் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலும் இருக்கும்.
பழத்தின் கொட்டையைச் சுற்றி ஒரு கூழ் உள்ளது. இது மிகவும் சுவையானது. இது சீனாவில் உருவானாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து வருகிறது. இதன் வேர், இலை, பட்டை அனைத்தும் மருந்தாகப் பயன்படுகிறது.