காஞ்சிபுரம் மாவட்ட பத்திர பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவை ரத்து செய்து மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய 1லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இரண்டு ஊழியர்கள் கைது.
காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்காரர் நடவடிக்கை.
காஞ்சிபுரம் மாநகராட்சி ஓரிக்கை பகுதியில் மாவட்டப் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் சென்னையைச் சேர்ந்த உலகநாதன் என்பவர் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா பண்ருட்டி பகுதியில் உள்ள தனது மாமியாரின் சொத்துக்களை சிலர் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து கொண்டுள்ளதாகவும், அந்த பத்திர பதிவினை ரத்து செய்து, வாலாஜாபாத் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு மேல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.
பத்திரப்பதிவை கேன்சல் செய்து மேல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவி அலுவலராக பணிபுரியும் நவீன்குமார் 1லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கேட்பது குறித்து உலகநாதன் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் படி இன்று நவீன் குமாருக்கு லஞ்சம் கொடுக்க சென்று உள்ளார்.
மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் இருந்த நவீன் குமாரும்
அவருக்கு உதவியாக டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் சந்தோஷ் பாபு ஆகிய இருவரும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி உள்ளனர்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான போலீசார், மாவட்ட பதிவாளர் அலுவலக ஊழியர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து உதவி அலுவலர் நவீன் குமார் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் சந்தோஷ் பாபு ஆகிய இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.