உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளதால், தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது.

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கிய, சிறப்பு தீர்மானத்துக்கும் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.

அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் அதன் தீர்மானங்களை செல்லாது என்று அறிவிக்க கோரிய தங்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ் தள்ளுபடி செய்தது.

மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் அமர்வு, தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று தீர்ப்பில் கூறியுள்ளனர்.