இன்று (25.08.2023) முதலமைச்சர் மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்து நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மாடம்பாக்கம், மாநகராட்சி துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவினை வழங்கி, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்நிகழ்ச்சியில் மண்டலக்குழுத் தவைவர்கள் சு.இந்திரன், து.காமராஜ் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.