![](https://gstroadnews.com/wp-content/uploads/2023/08/Capture-478.jpg)
இது சென்னை எழும்பூரிலிருந்து தமிழகத்தின் தெற்கு பகுதிகளுக்கு மேலும் அதிக ரயில் சேவைகளுக்கு வழிவகுக்கும்.
இதன் காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து சிந்தாதிரிப்பேட்டை வரை இயக்கப்படும் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் இதை செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்தார்.
4.3 கி.மீ நீளமுள்ள சென்னை கடற்கரை – சென்னை எழும்பூர் 4 வது ரயில் பாதை திட்டம் .279 கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ளது. சென்னை எழும்பூரை வடக்கு நோக்கி செல்லும் ரயில்களின் இன்னொரு முனையமாக உருவாக்கவும், சென்னை சென்ட்ரலின் நெரிசலை ஓரளவு குறைக்கும் விதமாகவும் தென்னக ரயில்வே இந்த திட்டத்தை நிறைவேற்ற உள்ளது. திரு. பி. விஸ்வநாத் ஈர்யா இதை 24.08.2023 ( நடைபெற்ற பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் இதை அறிவித்தார்.
சென்னை கடற்கரை – சென்னை எழும்பூர் இடையிலான ரயில் போக்குவரத்தடை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து இக்கூட்டத்தில் அறிவித்த சென்னை கோட்ட மேலாளர் இந்த திட்டத்தால் கிடைக்கும் பயன்களை எடுத்துரைத்தார்.
சென்னை கடற்கரை – சென்னை எழும்பூர் 4 வது ரயில் பாதையை உருவாக்க உதவும் வகையில் இந்த தற்காலிக பறக்கும் ரயில் சேவை நிறுத்தம் வரும் 27 ஆகஸ்ட் 2023 முதல் 7 மாதங்களுக்கு அமலில் இருக்கும். ஆனால் அன்று முதல் சிந்தாதிரிப்பேட்டை-வேளச்சேரி இடையே ரயில் சேவை தொடர்ந்து இயங்கும். தற்போது சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே 122 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் சேவை மாற்றத்திற்கு பிறகு சிந்தாதிரிப்பேட்டை-வேளச்சேரி இடையே 80 (40 ஜோடி) மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும். நெரிசல் நேரங்களில் 25 நிமிடங்களுக்கு ஒரு முறையும் மற்ற நேரங்களில் 30 நிமிடங்களுக்கு ஒரு முறையும் ரயில்கள் இயக்கப்படும்.
இந்த திட்டம் நிறைவேற ஒத்துழைப்பு தருமாறு ரயில் பயணிகளுக்கு சென்னை ரயில்வே கோட்டம் கோரிக்கைவிட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே கூடுதல் மாநகர பேருந்துகளை இயக்குவது குறித்து மாநில அரசுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
27 ஆகஸ்ட் 2023 முதல் செயலுக்கு வரும் சிந்தாதிரிப்பேட்டை-வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையின் அட்டவணை இத்துடன் இணைக்கப்படுகிறது.