இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் எல்லோருக்கும் எல்லாம் என்னும் சிறந்த சித்தாந்தத்தில் செயல்பட்டு வரும் நம் சீர்மிகு மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் காலை உணவுத் திட்டம் இன்று தமிழ் நாடு முழுவதும் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின்படி தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 சிட்லபாக்கம் பகுதிக்கு உட்பட்ட மாநகர தொடக்கப்பள்ளி சிட்லபாக்கம் 2வது பிரதான சாலையில் சமையல் கூடம் திறப்பு விழா காலை 8:00 மணி மற்றும் அம்பேத்கர் ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி எனப்படும் மாநகர தொடக்கப்பள்ளி சிட்லபாக்கம் காந்தி தெரு விரிவில் காலை 8:20 மணியில் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புடன் காலை உணவை தாம்பரம் மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் திரு.ஜெயப்பிரதீப் சந்திரன் துவிக்கிவைத்து பள்ளி மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவு உண்டபோது மாமண்ற உறுப்பினர் திரு.சிட்லபாக்கம் சி.ஜெகன் MC, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் திரு.பிரபாகரன், சுகாதார அதிகாரி திரு.நாகராஜ், பள்ளி தலைமை ஆசிரியைகள், திமுகழக முக்கிய நிர்வாகிள், மாணவர்களின் பெற்றோர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பகுதி வாழ் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த காலை உணவு திட்டத்தில் அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் பெரு மகிழ்ச்சியடைந்து மாண்புமிகு திமிழ் நாடு முதலமைச்சரைக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும், மாநகராட்சி நிர்வாகிகளுக்கும் புன்னகை முகத்துடன் நன்றியை தெரிவித்தனர்.