நிலவின் தென் துருவத்தில் யாரும் இதுவரை செல்லாத இடத்தில் சந்திராயன் மூன்று வெற்றிகரமாக இறங்கி படம் பிடித்துக் கொண்டிருக்கிறது.
இந்த சாதனையை உலகமே பாராட்டி வருகிறது. இருந்தாலும் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஒரு நாடு இப்படி சாதனை படைக்கிறதே என்ற வயிற்று எரிச்சல் இங்கிலாந்து காரர்களுக்கு ரொம்பவே உள்ளது.
அங்கே ஒரு செய்தி வாசிப்பாளர் இனிமேல் இந்தியா எங்களிடம் உதவி கேட்டு வரக்கூடாது.
2016 முதல் 2021 வரை நாங்கள் வழங்கிய கோடிக்கணக்கான ரூபாயை திருப்பித் தர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விமர்சிக்கப்பட்டது .
அவரது கருத்தால் கோபமடைந்த இந்தியர்கள் அப்படியானால் இதுவரை எங்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை எல்லாம் தா.
கோகினூர் வைரத்தை தா என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள்.