நிலவில் தரையிறங்கிய பிறகு பிரக்யான் ரோவரை சுமந்து செல்லும் “விக்ரம்” லேண்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ பகிர்ந்துள்ளது.

நிலவின் தட்டையான மேற்பரப்பில் வெற்றிகரமாக சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சற்றுமுன்னதாக, நிலவில் தரையிறங்கிய பிறகு பிரக்யான் ரோவரை சுமந்து செல்லும் விண்கலத்தின் “விக்ரம்” லேண்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ பகிர்ந்துள்ளது. சந்திரயான் விண்கலம் தரையிறங்கிய தளத்தின் ஒரு பகுதியை புகைப்படம் காட்டுகிறது. மேலும், இந்த புகைப்படத்தில் விக்ரம் லேண்டரின் கால், அதனுடன் நிழலும் தெரிகிறது.

மேலும் , நிலவின் தட்டையான மேற்பரப்பை சந்திரயான்-3 விண்கலம் தேர்ந்தெடுத்து தரையிறங்கியுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

முன்னதாக, நேற்று மாலை 6.04 மணியளவில் சந்திரயான் -3 பாதுகாப்பாக நிலவின் தென் துருவத்தில் பத்திரிமாக தரையிறங்கியது. ஒட்டு மொத்த உலகமும் இந்த தருணத்தை உற்று நோக்கியது. நிலவில் தரையிறங்கியது என்ற இறுதி முடிவு வந்தவுடன் தான் இந்தியர் அனைவரும் பெருமூச்சு விட்டனர். அடுத்த கட்டமாக, 8. 17 மணியளவில் லேண்டர் விக்ரம் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ குழுவிடம் தொடர்பு கொள்ளத் தொடங்கியது. அதையடுத்து தற்போது, விக்ரம் லேண்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ பகிர்ந்துள்ளது.