சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் படிர்ர் தாம்பரம் அடுத்த ஸ்ரீசாய்ராம் கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட திரையில் சந்திரயான்-3 வின்கல விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தடம் பதிக்கும் காட்சியை கண்டுகளித்தனர்.

இந்த ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் தான் சந்திரயான்-3 முழு திட்ட இயக்குனராக உள்ள வீரமுத்துவேல் தனது முதல் மெக்கனிகல் பி.டெக் பொறியியல் படிப்பை 1998 ல் துவங்கினார். ஏற்கனவே டிப்ளோமா படித்த அவர் இரண்டாம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்து 2001 வரை மூன்று ஆண்டுகள் படித்துள்ளார்.

அப்போது மெக்கனிகல் துறை பேராசியர் ராந்திரபிரசாத் கூறும்போது:-

படிக்கும்போது ஆழ்ந்து புரிந்து படிப்பார். நல்ல மாணவராக அப்போதே திகழ்ந்தார். அதனை தொடர்ந்து எம்.டெக் திருச்சியில் படித்தார்.

மேலும் வின்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டு சென்னை ஐ.ஐ.டி யில் பி.எச்.டி படித்து டாக்டர் பட்டம் பெற்றார்.

அதனை தொடந்து சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் சில ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் அவருக்கு இஸ்ரோவில் பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது.

அதன் காரணமாக பல்வேறு இஸ்ரோவின் திட்டங்களில் பணி செய்தாலும் மயில்சாமி அண்ணாதுரையுடன் சேர்ந்து சந்திரயான்-1 திட்டத்தில் பணியாற்றினார். அதன் வாய்ப்பாக சந்திரயான்-2 ல் திட்டத்திலும் முக்கிய பங்குவகித்தார்.

இந்த நிலையில் தற்போது உலகமே எதிர்பார்க்கும் சந்திரயான்-3 திட்டத்திற்கு முழு பொருப்பையும் ஏற்று செயல்பட்டார் அதனால் தான் இந்த கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் வீரமுத்துவின் வெற்றியை பெரிய அளவிலான திரையில் கண்டு அவரின் திறமையை போற்றுகிறார்கள்.. பெருமை கொண்டனர்.

அதே வேளையில் கல்லூரியில் செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து தலைமையில் விக்ரம் லேண்டர் நிலவில் மெதுவாக இறங்கியதை கண்டனர். மேலும் வீரமுத்துவேல் பேசியதை கண்டும் துள்ளி குதித்த மாணவர்கள் தேசிய கொடிகளை அசைத்தும் வீரமுத்துவேல் வாழ்க என கோஷங்களை எழுப்பிய நிலையில் இனிப்புகளை பரிமாறிக்கொண்டு, அங்கு நடத்தப்பட்ட வெற்றி வானவேடிக்கை கொண்டாட்டத்தில் பல வண்ணபட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.