அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்குப் பிறகு நிலவில் கால்பதித்த நான்காவது நாடாக இந்தியா இருக்கிறது. அதேசமயம், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் உலகின் ஒரே நாடாக இந்தியா உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சந்திரயான் – 3
சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று மாலை சரியாக 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதன்மூலம், நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது.
முன்னதாக, பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு தலைமையகத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கும், அதிலிருந்து பிரக்யான் ரோவர் இயக்குவதற்கும் முன்னதாக கவுண்டன் நிகழ்வு நடைபெற்றது. சரியாக 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் மென்மையான முறையில் (Soft Landing) தரையிறக்கப்பட்டது.
6 சக்கரங்கள் கொண்ட சிறிய கருவியான ரோவர், இந்தியாவில் மூவர்ணக்கூெடிமயயும் இஸ்ரோவின் சின்னத்தையும் நிலவில் பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 14 நாட்களுக்கு சூரியஒளிசக்தியின் மூலம் ரோவர் கருவி இபங்கும் என்றும், ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் என்றும் இஸ்ரோ தலைமை கட்டுப்பாடு மையத்தின் மூலம் இதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்குப் பிறகு நிலவில் கால்பதித்த நான்காவது நாடாக இந்தியா இருக்கிறது. அதேசமயம், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் உலகின் ஒரே நாடாக இந்தியா உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.