செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த வண்டலூர் பி.எஸ்.அப்துல் ரகுமான் கல்லூரி இயங்கி வருகிறது.
இந்த கல்லூரியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ மணிகள் பயின்று வருகின்றனர்.
பல்வேறு மாநிலத்திலிருந்து இந்த கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் தங்கி கொள்வதற்காக கல்லூரி உள்ளேயே பெண்கள் ஆண்கள் தனி தனியாக தங்கி கொள்ளுவதற்கு ஹாஸ்டல்கள் உள்ளது.
ஹாஸ்டலில் தங்கும் மாணவ மாணவிகள் தங்கும் வசதியோடு மூன்று வேளை உணவு சாப்பிடுவதற்கு சேர்த்து ஒரு லட்சம் முதல் 1.5 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
அந்த வகையில் இரவு 8 மணி அளவில் கல்லூரியில் இருக்கும் KVA MENS மெஸ்ஸில் முதலாம் ஆண்டு படிக்கும் ஆண் மாணவர்கள் சாப்பிட சென்றுள்ளனர்.
அங்கு மெஸ்ஸில் வைக்கப்பட்டிருந்த புரோட்டோவுக்கு சிக்கன் குழம்பை எடுத்து தட்டில் ஊற்றி போது பெரிய அளவில் பல்லி இருப்பதை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே மாணவர்கள் அதனை படம் மற்றும் வீடியோ எடுத்த போது மெஸ் நடத்தும் உரிமையாளர் மாணவர்களின் செல்போனை பறித்து இருந்த அனைத்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அழித்துள்ளனர்.
இருந்தபோதிலும் கல்லூரியின் மாணவ மாணவிகள் இருக்கும் குழுவில் சிக்கன் குழம்புக்கு பதிலாக பல்லி குழம்பை ஊற்றி விட்டார்கள் என மாணவர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.