
வரும் 24ம் தேதி காலை 9 மணிக்கு சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தமிழக முதலமைச்சர், திருச்சியில் இருந்து நாகப்பட்டினத்திற்கு சென்று இரவு நாகப்பட்டினத்தில் தங்குகிறார்.
இதைத்தொடர்ந்து 25ம் தேதி காலை திருக்குவளையில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்திலும் முதலமைச்சர் பங்கேற்கிறார்.
மேலும், 26ம் தேதி தமிழக முதலமைச்சர் கள ஆய்வு திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களின் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தொடர்ந்து 27ம் தேதி திருத்துறைப்பூண்டியில் நடைபெறம் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு சிறப்பு விமானம் மூலம் திருச்சியில் இருந்து முதலமைச்சர் சென்னை திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.