வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய விரும்புவோருக்கு மாநில தேர்தல் ஆணையம் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், வரும் 21.08.2023 வரை அதிகாரிகள்‌, ஒவ்வொரு வீட்டிலும்‌ வாக்காளர்களின்‌ விவரங்களை சரிபார்த்து குறித்து கொள்வார்‌. அப்போது வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்‌ சேர்ப்பு, நீக்கம்‌, ஆதார்‌ எண்‌ இணைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம்‌. 18 வயது பூர்த்தி அடைபவர்கள்‌ வாக்காளர்‌ அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால் முதியவர்கள், இசேவை மையம் சென்று திருத்தம் செய்ய முடியாதவர்கள், புதிதாக வாக்களர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள் பயன்பெறுவார்கள் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவிச்சிருக்குது