தாம்பரத்தில் சென்னை அடுக்குமாடி குடியிப்பு கட்டுமான உரிமையாளர்களின் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் சென்னை சுற்றியுள்ள அடுக்குமாடி குடியிப்புகள் கட்டுமான உரிமையாளர்கள் கலந்துக்கொண்டனர்.

சமிபத்தில் அரசு பதிவுத்துறை கட்டண உயர்வு, நடைமுறை சட்டங்கள் குறித்தும், பொது அதிகாரம் பெற நிர்ணையம் கட்டணம், புதியதாக சென்னை மாநகர குழுமம் விரிவாக்கம் செய்யப்பட்டது குறித்தும் ஆலோசனை செய்தனர்.

அதனையடுத்து செய்தியாளர்களிம் பேசிய அச்சங்க நிர்வாகி சுரேஷ்:-

அனைவருக்கும் வீடு என்கிற தமிழக முதல்வரின் என்னத்தை செயலாற்றும் விதமாக அடுக்குமாடி குடியிப்பு கட்டுமான சங்கத்தினர் செயல்படுத்திவருகிறோம், அரசு 8 சதவீகிதமாக இருந்த பத்திரப்பதிவு கட்டணத்தை ஆகஸ்ட் 16ம் தேதி முதல் 9% சதவீகிதமாக உயர்த்தியுள்ளது. மேலும் வீட்டின் தகவலை ஜியோ மேப் மூலம் படமாக பதிவு செய்திடவும் கூறியுள்ளது.

இதில் முழுமை பெறதாக வீடுகளுக்கு எப்படி என்பது குறித்து முழு தகவல் இல்லை. அதுபோல் புதிய பத்திரப் பதிவு கட்டண உயர்வால் 50 லட்சத்தில் வீடு பதியும் உரிமையாளருக்கு கூடுதலாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் கூடுதல் நிதி சுமை ஏற்படுகிறது. ஏற்கனவே 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி உள்ளிட்ட பல்வேறு வித வரிச்சுமைகளால் பாதிப்புகுள்ளாகும் நிலையில் தமிழ்நாடு அரசு மற்ற மாநிலங்களை போல் பத்திரபதிவு கட்டணத்தை குறைத்திடவேண்டும். பொது அதிகார பத்திரத்திற்கு செலுத்தும் ஒரு சதவீதம் கட்டணத்தை வீடு உரிமையாளர் பத்திரம் பதிவு செய்திடும்போது அதனை கழித்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.