மு.க.ஸ்டாலின்‌ இன்று (23.8.2023) சென்னை, கோயம்பேடு, தூய தாமஸ்‌ கல்லூரி அரங்கத்தில்‌ தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர்‌ ஆணையத்தின்‌ சார்பில்‌ நடைபெற்ற முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ நூற்றாண்டு விழா மற்றும்‌ அனைத்துக்‌ கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப்‌ போட்டி பரிசளிப்பு விழாவில்‌, மாநில அளவில்‌ வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகைக்கான காசோலைகள்‌, பதக்கங்கள்‌ மற்றும்‌ சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார்‌. இந்த நிகழ்ச்சியில்‌, உயர்கல்வித்‌ துறை அமைச்சர்‌ க.பொன்முடி, மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சர்‌ மா. சுப்பிரமணியன்‌, சிறுபான்மையினர்‌ நலன்‌ மற்றும்‌ வெளிநாடுவாழ்‌ தமிழர்‌ நலத்துறை அமைச்சர்‌ கே.எஸ்‌.செஞ்சி மஸ்தான்‌, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்‌ பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்‌ தமிழச்சி தங்கப்பாண்டியன்‌, சட்டமன்ற உறுப்பினர்‌ ஏ.எம்‌.வி.பிரபாகர ராஜா, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர்‌ நல ஆணையத்‌ தலைவர்‌ சா.பீட்டர்‌ அல்போன்ஸ்‌, தமிழ்நாடு பாடநூல்‌ கழகத்தின்‌ தலைவர்‌ திண்டுக்கல்‌ லியோனி, பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்துறை செயலாளர்‌ ரீட்டா ஹரிஷ்‌ தக்கர்‌, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர்‌ நல ஆணையத்தின்‌ துணைத்‌ தலைவர்‌ இறையன்பன்‌ குத்தூஸ்‌, மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.