மேட்டூர் அணை கட்டப்பட்டபோது அப்போதைய செலவுத்தொகை ரூ.4 கோடியே 80 லட்சம் ஆகும்.
மேட்டூர் அணையின் நீளம் 5,300 அடி. அணையின் நீர்த்தேக்க பகுதி 59.25 சதுர மைல்.
ஆங்கிலேயர்கள் தமிழகத்திற்கு அளித்த வரப்பிரசாதம்: 90-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மேட்டூர் அணைகர்நாடக மாநிலம் குடகு மலையில் உள்ள மெக்காரா என்ற இடத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் வழியாக பாய்ந்தோடி வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் வழியாக 800 கிலோமீட்டர் தூரம் கடந்து காவிரி ஆறு வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் முடிய பெய்யும் பருவமழையினால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்தது.

இதனால் விவசாய பயிர்கள் நாசம் அடைவதை தடுப்பதற்காக ஆங்கிலேயர்களால் 1925-ம் ஆண்டு மேட்டூர் அணை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. அப்போதைய தலைமை வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு என்ஜினீயர் கர்னல் டபிள்யூ.எல்.எல்லீஸ், அணை நிர்வாக என்ஜினீயர் வெங்கட்ராமையா, முதன்மை தலைமை என்ஜினீயர் முல்லிங் கஸ் ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகலாக அணை கட்டுமான பணியில் ஈடுபட்டனர்.

இவ்வாறு தொடங்கப்பட்ட அணையின் கட்டுமான பணி சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு 1934-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ந் தேதி நிறைவடைந்தது. இந்த அணை கட்டப்பட்டபோது அப்போதைய செலவுத்தொகை ரூ.4 கோடியே 80 லட்சம் ஆகும்.

இதைத்தொடர்ந்து 1934-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி, அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை மாகாண கவர்னராக இருந்த சர் ஜார்ஜ் பிரெடரிக் ஸ்டான்லி அணையை திறந்து வைத்தார். அவர் நினைவாகவே மேட்டூர் அணைக்கு ஸ்டாலின் நீர்த்தேக்கம் என்ற பெயரிடப்பட்டது. இது காலப்போக்கில் மேட்டூர் அணை என்று மக்கள் மத்தியில் அழைக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்கள் தமிழகத்திற்கு அளித்த வரப்பிரசாதமாக இந்த அணை திகழ்கிறது.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சாவூர் உள்பட 12 டெல்டா மாவட்டங்களின் பாசன தேவை மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் மேட்டூர் அணை உயிர்நாடியாக விளங்குகிறது.

மேட்டூர் அணையின் நீளம் 5,300 அடி. அணையின் நீர்த்தேக்க பகுதி 59.25 சதுர மைல். அணையின் மொத்த கொள்ளளவு 93.5 டி.எம்.சி. ஆகும். (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி).

அணையின் உச்ச நீர்மட்டம் 120 அடி வரை தண்ணீர் சேமித்து வைக்கலாம். பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விடுவதற்காக அணையின் நீர்மட்ட அளவை பொறுத்து மேல்மட்ட மதகு, கீழ்மட்ட மதகு, மின் நிலை மதகு என 3 நிலை மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அணையின் இடது கரைப்பகுதியில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும் நிலையில் உபரி நீர் திறந்து விடுவதற்காக 16 கண் மதகுகள் அமைக்கபட்டுள்ளன. ஒவ்வொரு மதகும் 20 அடி உயரமும், 60 அடி நீளமும் கொண்டதாகும். இந்த அணையில் அமைக்கப்பட்டுள்ள மதகுகள் அதற்குரிய தளவாடங்கள் அனைத்தும் இங்கிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டன.

மதகுகளை இயக்க 16 மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மின்மோட்டார்கள் கைகளாலும் இயக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 4 லட்சத்து 410 கனஅடி நீரை வெளியேற்றலாம். இது தவிர அணையின் வலது கரைப்பகுதியில் மண் கரை கொண்ட வெள்ளப்போக்கி 814 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத வகையில் அணைக்கு மிக அதிகளவில் வெள்ளம் வந்தால் அணைக்கு எவ்வித சேதமும் இன்றி அதிகளவு வெள்ள நீரை வெளியேற்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டது. இதன் மூலம் வினாடிக்கு 50 ஆயிரத்து 400 கனஅடி வரை தண்ணீரை வெளியேற்றலாம். அணையின் மேல் மட்ட மதகு, கீழ்மட்ட மதகு மற்றும் மின் நிலை மதகு வழியாக வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி வரை தண்ணீரை வெளியேற்ற முடியும்.

மேட்டூர் அணை கட்டுமான பணி தொடங்குவதற்கு முன்னதாக தென்மேற்கு பருவமழை காலங்களில் வினாடிக்கு 5 லட்சம் கனஅடி வரை தண்ணீர் வந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மேட்டூர் அணை கட்டுமானம் வடிவமைக்கப்பட்டபோது வினாடிக்கு 5 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

பருவமழை காலத்தில் கட்டுக்கடங்காமல் ஆர்ப்பரித்து இருகரைகளையும் தொட்டுக்கொண்டு ஆக்ரோஷமாக பெருக்கெடுத்து வந்த காட்டாற்று வெள்ளத்தை தடுத்து நிறுத்தும் பணியை மேட்டூர் அணை சிறப்பாக செய்து வருகிறது. அணை கட்டப்பட்ட பிறகு 1965-ம் ஆண்டு அதிகபட்சமாக வினாடிக்கு 3 லட்சத்து 1,052 கனஅடி தண்ணீர் வந்தது. அதன்பிறகு 2019-ம் ஆண்டு வினாடிக்கு 2 லட்சத்து 53 ஆயிரத்து 730 கனஅடி தண்ணீர் வந்தது. 2005-ம் ஆண்டு அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சத்து 41 ஆயிரத்து 300 கனஅடியும், கடைசியாக கடந்த ஆண்டு(2022) அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சத்து 4 ஆயிரம் கனஅடி வரையும் தண்ணீர் வந்தது.

ஆண்டுதோறும் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த பாசனத்தின் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 12 டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பும் நேரங்களில் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வீணாக கடலில் கலக்கிறது. இதை தடுத்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் செய்வதற்காக மேட்டூர் அணையின் உபரிநீர் திட்டம் 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி உள்ளிட்ட தாலுகாவை சேர்ந்த சுமார் 100 ஏரிகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்று நிரப்புவதற்கு திட்டம் வகுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்ட நேரங்களில் இந்த உபரிநீர் திட்டத்தின் மூலம் பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் எடுத்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வினாடிக்கு பல லட்சம் கனஅடி வீதம் வந்த காட்டாற்று வெள்ளத்தை தனது கட்டுக்குள் வைத்து தமிழக மக்களுக்கு பயனளித்த மேட்டூர் அணை தனது 90-வது ஆண்டில் காவிரி நீருக்காக கண்ணீர் வடிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


Hacklinkgrandpashabet
grandpashabet
jojobet
setrabet
Hair Transplant istanbul
da pa kontrolü
jojobet
güvenilir bahis siteleri
Vozol Puff
iqos terea
instagram takipçi
takipçi
antalya escort
ankara escort
bursa escort
izmit escort
viagra
deneme bonusu veren siteler
deneme bonusu veren siteler
deneme bonusu 2024
deneme bonusu veren siteler
deneme bonusu veren siteler
deneme bonusu veren siteler
deneme bonusu veren siteler
betnano giriş
bahçelievler nakliyat
istanbul evden eve nakliyat
istanbul bahçelievler evden eve nakliyat
hair transplant
izmir escort
casibom mobil
casibom giriş
İstanbul Escorts
İstanbul masöz
Betturkey