முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ சென்னை தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று (22.08.2023) பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன்‌ கட்டட வளாகத்தில்‌, “தி இந்து” குழுமத்தின்‌ ஆவண காப்பகத்தில்‌ இருந்து செறிவாக தேர்வு செய்யப்பட்ட சென்னை நகரின்‌ புகைப்படத்‌ தொகுப்புகளைக்‌ கொண்ட புகைப்படக்‌ கண்காட்சியை திறந்து வைத்து, பார்வையிட்டார்‌. இந்நிகழ்ச்சியில்‌, நிதி மற்றும்‌ மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்‌ தங்கம்‌ தென்னரசு, மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சர்‌ மா.சுப்பிரமணியன்‌, இந்து சமயம்‌ மற்றும்‌ அறநிலையத்துறை அமைச்சர்‌ பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்‌ ஆர்‌.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்‌ இ.பரந்தாமன்‌, துணை மேயர்‌ மு.மகேஷ்குமார்‌, கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர்‌ டாக்டர்‌ ஜெ.ராதாகிருஷ்ணன்‌, தி இந்து குழுமத்தின்‌ தலைவர்‌ நிர்மலா லஷ்மண்‌, இயக்குநர்கள்‌ என்‌. ராம்‌, என்‌. முரளி, என்‌.ரவி, மாமன்ற உறுப்பினர்கள்‌ பற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.