செங்கல்பட்டு மாவட்டம்‌, கீழ்க்கட்டளை ஏரியையொட்டி, நன்மங்கலம்‌ ஏரி கிணறுகளில்‌ முறைகேடாக தண்ணீர் எடுக்கப்பட்டு சுற்றுப்புறங்களில்‌ உள்ள குடியிருப்புகளுக்கு லாரிகள்‌ மூலம்‌ தண்ணீர் விநியோகம்‌ செய்யப்பட்டு வருவதை தடுக்க, அப்பகுதியை ஆய்வு செய்து முறையற்ற போர்வெல்‌ தொடர்புகளையும்‌ மற்றும்‌ மின்‌ இணைப்புகளையும்‌ துண்டிக்குமாறு மாவட்ட ஆட்சித்‌ தலைவர் ஆ.ர.ராகுல்‌ நாத்‌ உத்தரவிட்டார்‌. உடன்‌ தாம்பரம்‌ மாநகராட்சி ஆணையர்‌ அழகுமீனா, தாம்பரம்‌ காவல்‌ துணை ஆணையாளர்‌ பவன்‌ குமார்‌ ரெட்டி மற்றும்‌ அரசு அதிகாரிகள்‌ உள்ளனர்‌.