
சந்திரயான் 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் 3 லேண்டர் இடையே தகவல் தொடர்பு ஏற்பட்டுள்ளது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
சந்திரயான்-2 லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கை தோல்வி அடைந்தாலும், கடந்த 4 ஆண்டுகளாக சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்தது என இஸ்ரோ கூறியுள்ளது.
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்- 2 கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 48 நாட்கள் பயணத்துக்குப் பின் நவம்பர் 7ம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.
பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 2 வெற்றிகரமாக நுழைந்தது.
திடீரென விக்ரம் லேண்டர் கருவியின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
சந்திரயான்-2 லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கை தோல்வி அடைந்தாலும், கடந்த 4 ஆண்டுகளாக சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்தது.
நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் – 3 விண்கலத்தை ஜூலை 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக செலுத்தியது.
நிலவில் இருந்து குறைந்தபட்சம் 25 கி.மீ., மற்றும் அதிகபட்சம் 134 கி.மீ., சுற்று வட்டப் பாதைக்குள் லேண்டர் சாதனம் நேற்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
நாளை மறுதினம் ( ஆக-23) மாலை 6:04 மணிக்கு லேண்டர் நிலவில் தரையிறக்கப்பட உள்ளது.
இந்நிலையில், சந்திரயான் 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் 3 லேண்டர் இடையே தகவல் தொடர்பு ஏற்பட்டுள்ளது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இஸ்ரோ மேலும் கூறியிருப்பதாவது:
ஏற்கனவே அனுப்பப்பட்ட சந்திரயான்-2 ஆர்பிட்டருடன் சந்திரயான்-3 லேண்டர் தகவல் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டது.
விக்ரம் லேண்டர் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் சந்திரயான் 2 ஆர்பிட்டர் மூலமாகவும் கிடைக்கும். இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.