பண்ருட்டி அருகே சின்ன ஒடப்பன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (61). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தனது மனைவி வளர்மதியுடன் தனியாக வசித்து வருகிறார். நேற்று மதியம் தனது உறவினர் நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு பாச்சாரபாளையம் கிராமத்திற்கு சென்று இருந்தனர்.
பின்னர் வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் வாரண்டாவில் மறைத்து வைத்து இருந்த சாவி எடுத்து பிரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து எடுத்து சென்று இருப்பது தெரிய வந்தது.
இது முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் ஆறுமுகம் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்தனர். மோப்ப நாய் வந்து சிறிது தூரம் சென்று திரும்பியது. கை ரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். திருடு போன நகையின் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்.