உடலின் ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க தினமும் யோகா செய்யலாம். இதற்கு, தோள்பட்டை ஆதரவுடன் தலைகீழாக நிற்கும் ‘சர்வாங்காசனம்’ சிறந்தது. இதைத் தொடர்ந்து செய்வதன் மூலம், உடலின் அனைத்து பாகங்களும் சிறந்த முறையில் செயல்படும். மேலும், மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும்.