இந்த பழனிச்சாமி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு சிறப்பாக ஆட்சி செய்தேன்.
நீட் தேர்வை முதல் கையெழுத்தில் ரத்து செய்வேன் என்று சொல்லி இன்று உண்ணாவிரதம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார்கள்.
வெட்கம் மானம் சூடு சொரணை இருந்தால் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் பொய்களால் தமிழக மாணவர்களை இழந்து வருகிறோம்.
2010இல் திமுக காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.
கருணாநிதி முதல்வராக இருந்த போது கச்சதீவை தாரை வார்த்த திமுக. இப்போது கச்சதீவை மீட்பேன் என ஸ்டாலின் பொய் பேசி வருகிறார்.
ஜெயலலிதா அம்மா இருந்த போது பத்து வருடங்களாக திமுக அமைச்சர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை அப்போது வாய்தா வாங்கிவிட்டு இப்போது திமுக வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக மாற்றி அவசர அவசரமாக விடுதலையாகி வரும் திமுக அமைச்சர்களை விட்டு வைக்க மாட்டேன் உச்ச நீதிமன்றம் வரை சென்று தண்டனை பெற்று தருவேன். அதிமுக மதுரை மாநாட்டில்
எடப்பாடி பழனிச்சாமி…