பொதுமக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ரேலா மருத்துவமனை மற்றும் சென்னை சைக்கிள் கிளப் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை வளாகத்தில் 500 க்கும் மேற்பட்ட சைக்கிள் வீரர்கள் கலந்துக்கொண்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மருத்துவர் இளங்குமரன் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினர் கொடியசைத்து துவக்கிவைத்தனர்.

குரோம்பேட்டையில் துங்கிய சைக்கிள் விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் வரை சென்று மீண்டும் குரோம்பேட்டை வந்தடையும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரேலா மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி மருத்துவர் இளங்குமரன்:- நாடு முழுவதும் உடல் உறுப்பு தானத்திற்காக 5 லட்சம் பேர் காத்துகொண்டுள்ளனர். மூளைச்சாவு அடைபவர்களிடம் மட்டுமே தேவைப்படும் உடல் உறுப்புகள் கிடைக்கிறது. அதுபோல் உறுப்புகள் கிடைகாமல் 90 சதவீகிதம் பேர் சுமார் 4.5 லட்சம் பேர் உயிர் இழக்கிறாரார்கள். இது போன்றவர்களுக்கு விபத்துகளில் முளைச்சாவு அடைபவர்களின் உறவினர்கள் உறுப்பு தானம் கொடுததால் பற்றாகுறை இருக்காது. அனைவரின் உயிரை காப்பாற்றி, அவர்களை நம்பியுள்ள குடும்பத்தினரையும் உதவி புரிய வேண்டும். சாலை விபத்துகள் நடைபெற கூடாது குறைக்க வேண்டும் என்பது எல்லோரின் எண்ணம் அப்படியும் விபத்தில் மூளைச்சாவு அடைபவர்களின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் இதுபோல் உறுப்பு தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்றார்.

உறுப்பு தானம் கொடுத்த குடும்பத்தை சேர்ந்த பெண் சஹானா பேசும்போது:- மூளைச்சாவு அடைந்த பின்னர் ஒருவர் உடல் உறுப்பு தானாம் தருவதால் 7பேரின் உயிர் காக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். என் சகோதரரின் உறுப்பு தற்போதும் புதைக்கப்படாமல், எரிக்கப்படாமல் ஏதே ஒருவரின் உடலின் இதயம் துடிக்கவும், சிறுநீரகம் செயல்படுவதை நான் துக்கத்திலும் மகிழ்ச்சியாக உணர்க்கிறேன் என்றார்.