
பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் துணைத் தலைவரான ஷா மஹ்மூத் குரேஷி, முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மிகவும் நெருக்கமானவர். இந்நிலையில் அவரை சனிக்கிழமை இரவு மத்திய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீரென கைது செய்தனர்.
குரேஷி வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய தகவலின் ரகசியத்தை காக்க தவறிய குற்ற்சாட்டின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் இஸ்லாமாபாத் முதன்மை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட அவரை மத்திய புலனாய்வு முகமை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய குரேஷி, எந்த அரசு ஆவணத்தையும் தான் பகிரவில்லை என்றும் அரசியல் ஆதாயத்திற்காக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.