- நிகழ்ச்சிகளை தொலைவிலிருந்து காணும் வகையில் மேடையில் பிரமாண்டமான ‘டிஜிட்டல்’ திரை
- மாநாடு வளாகத்தில் தொண்டர்கள் அமர 1.25 லட்சம் நாற்காலிகள்
- காலை 7:00 முதல் இரவு 7:00 வரை உணவு வழங்க ஏற்பாடு..
- காலையில் இட்லி, பொங்கல், வடை, உப்புமா, சட்னி, சாம்பார்; மதியம் ‘வெஜிடபிள்’ பிரியாணி, தக்காளி சாதம், தயிர் சாதம், புளி சாதம், காய்கறிக் கூட்டு, பொரியல், அப்பளம்..
- உணவு சமைக்க சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், உணவு பரிமாறுவோர், பாத்திரம் சுத்தம் செய்வோர் என 10,000 பேர்..
- மூன்று இடங்களில் 300 கவுன்டர்களில் பாக்கு மட்டை தட்டில் உணவு வழங்கவும், அமர்ந்து சாப்பிட டேபிள் நாற்காலிகளும் ஏற்பாடு..
- மாநாட்டு நிகழ்ச்சிகளை அனைவரும் பார்ப்பதற்கு வசதியாக ஆங்காங்கே எல்.இ.டி. திரைகள்
- நகரின் முக்கியப் பகுதிகளிலும் எல்.இ.டி. திரையில் மாநாட்டு நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு..
- மாநாட்டுக்கு வருவோர் நான்கு திசைகளிலும் இருந்து பந்தலுக்கு வர வழி செய்யப்பட்டு உள்ளது.
- வாகனங்களை நிறுத்த 300 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு, 15க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
- குடிநீர் வழங்க 300 மி.லி. அளவு கொண்ட 10 லட்சம் குடிநீர்பாட்டில்களுக்கு ‘ஆர்டர்’ தரப்பட்டுள்ளது.
- ஆங்காங்கே குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்தவும், சின்டெக்ஸ் தொட்டிகளில் குடிநீர் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பந்தல் அருகே 150 மொபைல் கழிப்பறைகள் அமைக்கப்பட உள்ளன. இது தவிர ஆங்காங்கே தற்காலிக கழிப்பறைகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- மாநாட்டை காலை 8:00 மணிக்கு கழக பொதுச் செயலர் இடப்படியார் கட்சிக் கொடியேற்றி துவக்கி வைக்க உள்ளார்.
- அவருக்கு தொண்டர்கள் அணிவகுப்பு மரியாதை அளிக்க உள்ளனர்.
- காலையிலிருந்து மாலை வரை கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
- அன்று மாலையில் கழகத்தின் காவலன், கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் எழுச்சி உரையாற்றுகிறார்..
- மாநாட்டையொட்டி புகைப்படக் கண்காட்சி நடக்க உள்ளது. கண்காட்சியில் கழக வரலாறு, புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி ஆகியோரின் திரைப்படம், அரசியல் வாழ்க்கையை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் இடம்பெற உள்ளன.
- மாநாட்டுக்கு வரும்படி மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தலா 10,000 குடும்பங்களுக்கு ‘வீடுதோறும் இலை’ என்ற தலைப்பின் கீழ் மரக்கன்றுடன் மாநாட்டு அழைப்பிதழ் கொடுக்க கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
- ஒவ்வொரு தொகுதியிலும் மூத்த நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை பொதுச்செயலாளர் கவுரவிக்கிறார்.