
பல்லாவரம் தனியார் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி தாம்பரம் காவல்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.
தாம்பரம் ஆணையரக காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 18 ல் இருந்து 20 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 182 நபர்கள் போதைப் பொருள்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்யும் நபர்களாக இருக்கிறார்கள், விற்பவர்களும் படித்த நபர்களாக உள்ளனர்.
பீகாரில் இருந்து இந்த கல்லூரிக்கு படிக்க வந்த மாணவன் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வியாரம் போல கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். அவர் அந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஏதோ ஒரு வகையில் இந்த போதைப் பொருளானது நமது வாழ்க்கையை பாதிக்கிறது. இதனால் இந்த போதையில் இருந்து விழிப்புணர்வுடன் இருப்பதற்காக இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளோம். என தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மாணவர்களிடம்
அதனை தொடர்ந்து போதைக்கு எதிராக விழிப்புணர்வு உறுதிமொழியை கல்லூரி மாணவர்கள் எடுத்துக்கொண்டனர்.