காவல் துறையினரின் அனுமதி மற்றும் பயோ மெட்ரிக் முறையில் அடையாளங்கள் சரி பாரத்து உறுதி செய்த பிறகுதான் சிம் கார்டு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும்.
மொத்தமாக பல இணைப்புகளும் இனி பெறமுடியாது. அத்திட்டம் கைவிடப்படுகிறது.
சிம் கார்டு விற்பனை முனையங்கள் பதிவு செய்திருக்க வேண்டும்.
சைபர் குற்றங்கள், மோசடி அழைப்புகள் போன்றவற்றிலிருந்து உபயோகிப்பாளர் களைப் பாதுகாத்திடவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
52 லட்சம் திருட்டுத்தனமான இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு அவைகள் செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளன.
67 ஆயிரம் சிம் கார்டு விற்பனையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களது பெயர்கள் கறுப்புப் பட்டியலில் (Block List) இல் சேர்க்கப்பட்டுள்ளது.
66 ஆயிரம் வாட்ஸ் ஆப் கணக்குகள் & 8 லட்சம் Payment Wallet கணக்குகள் முடக்கப் பட்டுள்ளன.
300 எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது ..