காஞ்சிபுரத்திலிருந்து தாம்பரம் வழியாக பல்லாவரத்தை நோக்கி வெள்ளை நிற ஸ்கார்பியோ கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
இந்த காரை சாமு என்பவர் ஒட்டி செல்ல அதில் மூன்று நபர்கள் இருந்தனர்.
சரியாக குரோம்பேட்டை பேருந்து நிலையத்தை கடந்து பான்ஸ் சிக்னல் அருகே ஜிஎஸ்டி சாலையில் செல்லும் போது திடீரென கார் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.
புகை வந்ததை பார்த்த ஓட்டுநர் காரை சாலையில் நடுவே நிறுத்திவிட்டு இறங்கி ஓடி விட்டார்.
சில நேரத்தில் கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. உடனே தகவல் தெரிந்ததும் தாம்பரம் தீயணைப்பு துறை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இது குறித்து குரோம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.