அதிமுகவின் விதிமுறை மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதை எதிர்த்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் மனு அளித்துள்ளனர்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்தது.

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலராக அங்கீகரித்தது நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது.

அதிமுக விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புதான் இறுதி முடிவு என்பதை தாங்கள் புரிந்து வைத்திருப்பதாக ஆணையம் பதில் மனுவில் தகவல் தெரிவித்துள்ளது.