பல்லாவரம் ரேடியல் சாலையில் கஞ்சா விற்பனையில் நடைபெறுவதாக பல்லாவரம் காவல் துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் பல்லாவரம் ரேடியல் சாலை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது போலீசாரை கண்டதும் டிப் டாப்பாக நின்று கொண்டிருந்த ஆசாமி ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஓட துவங்கினார்.
அவரை துரத்தி பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரிடம் சோதனை மேற்கண்ட போது 100, கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவரை பல்லாவரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் போரூர் ஐஸ்வர்யம் தெரு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (வயது-27) எனவும் இவர் துரைப்பாக்கத்தில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டு பகுதி நேரமாக கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவரின் வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த 1,கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் அனகாபுத்தூர் சுடுகாட்டு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இரண்டு பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் வடபழனி கே.கே நகர் பகுதியை சார்ந்த அஜய் (வயது-21 ) பூந்தமல்லி சுமித்ரா நகர் மூன்றாவது தெருவை சார்ந்த மரிய அந்தோணி செல்வம் (வயது-28 ) என தெரியவந்தது. இவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 1,கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்லாவரம் சங்கர் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் ஐ.டி ஊழியர் உட்பட 3 பேரிடமிருந்து 2 1/2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.