வேங்கைவாசல் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பாபு(56) பொறியாளரான இவர் அதே வேங்கைவாசலில் உள்ள டியானோ நிறுவனத்தில் பொது மேளாளராக பணி செய்கிறார். இவர் மனைவி சகுந்தலா ஆசிரியராகவும் மகள்கள் இரண்டுபேர் மாணவிகளாகவும் உள்ளனர்.
இன்று வழக்கம்போல் கதவை பூட்டி சென்ற நிலையில் மாலை வீடு திரும்பியபோது முன் கதவு கடபாரையால் உடைக்கப்பட்டு இருந்தது.
மேலும் வீட்டில் இருந்த இரண்டு பிரேக்களில் வைக்கப்பட்ட 75 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் உதவி ஆணையாளர் முருகேசன் உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகள் நேரில் தடயங்களை சேகரித்தும், அந்த வீட்டில் சிசிடிவி கேமரா இல்லாததால் அத்தெருவில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.