மதுரையில் அதிமுக மாநாடு நடத்துவதற்க்காக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் ஆர் பி உதயகுமார் ராஜன் செல்லப்பா செல்லூர் ராஜூ ஆகியோர் மாநாடு வேலைகளை நடத்தி வருகின்றனர். இதற்க்காக மதுரையில் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிச்சாமி போஸ்டர்கள் ஒட்டி தனது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாளை மறுநாள் வி.கே சசிகலா பிறந்த நாள் வருவதை ஒட்டி சசிகலாவின் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இதில் ஹய்லைட்டான விசயம் என்னவென்றால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா
நாம் இருவரும் ஒரே இரத்தம் மறக்கப் போவதில்லை நீ ஆற்றிய கட்சி பணி மறந்து போவதில்லை என்ற சசிகலாவுக்கு ஜெயலலிதா பிறந்தநாள் வாழ்த்துவது போல அடித்த போஸ்டர் அதிமுகா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டரை சசிகலாவின் தீவிர ஆதரவாளரும் அதிமுக முன்னாள் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெ.ஆர் சுரேஷ் என்பவர் அடித்துள்ளார். இப்படி மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி வி.கே சசிகலா ஆதரவாளர்களால் மதுரையில் போஸ்டர் யுத்தம் தொடங்கி உள்ளனர். இது எங்கே போய் முடியுமோ என்று மதுரை மக்களோடு அதிமுகவினரும் புலம்பி வருகின்றனர்.