தாம்பரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் தாம்பரம் பேரூந்து நிலையத்தில் நீட் தேர்வு தேர்வு ரத்து செய்திடவும், தமிகத்திற்கு விலக்கு அளித்திடவேண்டும் என ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக வாரிவுரிமை கட்சியினர், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், இந்திய தேசிய லீக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது இரண்டுமுறை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் அரசு மருத்துவகல்லூரியில் இடம் கிடைக்காத விரத்தியிம் மாணவன் ஜெகதீஸ்வரன் அவரின் தந்தை செல்வசேகர் என உயிர் பலியாவதை தடுத்திட நீட் தேர்வு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். தமிழக ஆளுநர் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.