மதுரை: மதுரை முழுவதும் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி மதுரையில் அதிமுகவின் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு அதிமுகவின் மிக முக்கியமான மாநாடாக கருதப்படுகிறது.
பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு மிகபெரிய மாநாட்டை எடப்பாடி தரப்பினர் நடத்த உள்ளனர். இந்த மாநாட்டிற்கு ஆரம்பத்திலிருந்தே பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.
தென்மாவட்டத்தில் பெரும்பான்மையான சமூகத்தினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு போஸ்டர்களை தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஊட்டி வந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு வரக்கூடாது என கடும் கண்டங்கள் கொண்ட வாசக போஸ்டர்கள் கிட்டத்தட்ட ஒரே சமூகத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான அமைப்பினர் மதுரை முழுவதும் பல்வேறு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
ஏற்கனவே இந்த மாநாட்டிற்கு தடை விதிக்கவேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அந்த வழக்கு இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரக்கூடிய நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு நெருக்கடி ஏற்படுத்தும் விதமாக மதுரையில் உள்ள 100 வார்டுகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது